அடுத்த சாக்லேட் காபி ரெடி…கொடூர லுக்கில் சாண்டி மாஸ்டர்!

லியோ திரைப்படத்தில் “சாக்லேட் காபி… சாக்லேட் காபி…” என்ற வசனத்தை சொல்லி சமீபத்தில் அனைவரது மனிதிலும் இடம் பிடித்துவர் சாண்டி மாஸ்டர். நடன இயக்குனராக இருந்த அவர், இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் லியோ திரைப்படத்துக்கு பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கிவிட்டது என்றே சொல்லாம்.

அந்த அளவுக்கு ஒரே அடியாக லியோ திரைப்படத்திற்கு பின் கன்னட சினிமாவுக்கே சென்று விட்டார். ஆம், தற்போது கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கத்தில், சாண்டி மாஸ்டர் நடிக்கும் ‘ரோசி’ என்கிற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

 

இந்த முதல் லுக் போஸ்டரில் சாண்டி மாஸ்டர் மிகவும் கொடூரமாக தோற்றமளிக்கிறார். இந்த படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது அவருக்கு சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

மேலும், இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட் புஷ் படத்தை இயக்கிய ஷூன்யாவின் அடுத்த, படமான ரோசி படப்பிடிப்பை விரைவில் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்