நடுராத்திரியில் நண்பன் செய்த வேலை.. சாண்டி முன்னாள் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!
தொகுப்பாளராக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியும் கூட. இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவகாரத்தும் பெற்றுக்கொண்டார்கள்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய நண்பர் ஆபாச வார்த்தை பேசி தன்னை காயப்படுத்தியதாக காஜல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய காஜல் பசுபதி ” எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். ஒரு நாள் எனக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவரிடம் நான் உதவி கேட்டேன்.
இதையும் படியுங்களேன்- நயன்தாராவுக்கு அந்த மாதிரி படங்கள் தான் பிடிக்கும்…உண்மையை போட்டுடைத்த இயக்குனர்.!
ஒரு தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை அவனுக்கு தெரியும். எனவே, அவனிடம் எனக்கு ஏதேனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா அவர்களிடம் பேசி எதாவது எனக்கு வாய்ப்பு இருந்தால் கேட்டு சொல்லு என்று கேட்டேன்.
நான் கேட்டு சில நாள் கழித்து ஒரு 12 ,1 மணி இருக்கும் நடுராத்திரியில் போன் செய்தான். நான் எடுத்து என்னவென்று கேட்டேன்…அப்போது அவன் என்னிடம் தவறான முறையில் ஆபாசமான சில கேள்விகளை கேட்டான். எனக்கு பிடிக்கவில்லை…ரொம்ப எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பரே இப்படி என்னை பேசிய ரொம்பவே வருத்தமாக இருந்தது” என சோகத்துடன் பேசியுள்ளார் நடிகை காஜல் பசுபதி.