சினிமா

எங்களுக்கு அடையாளம் கொடுத்த வீடு அது! பூர்ணிமா செயலால் கொந்தளித்த சனம் ஷெட்டி!

Published by
பால முருகன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7, 9 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லா சீசன்களில் நடப்பது போல காமெடி முதல் சண்டைகள் வரை நாமினேஷன் முதல் எலிமினேஷன் வரை என எல்லாமே நடந்து வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கானா பாலா வெளியேறினார்.

அவரை தொடர்நது இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் வீட்டிற்கு இருக்கும் பூர்ணிமா ரவி  செய்த செயல் பிக் பாஸ் ரசிகர்களை மிகவும் கடுப்பாக்கி உள்ளது. அப்படி என்ன செய்தார் என்றால் செருப்பை அந்த பக்கமாக வீசுவதற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டின் மேல் வீசியுள்ளார்.

11 பசங்க நான் மட்டும் ஒரே வீட்டில் தங்கி இருந்தேன்! பூர்ணிமா சொன்ன அனுபவ கதை!

வீசியவுடன் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்கள் சிரிக்கவும் செய்தார்கள். இவர் இப்படி செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பலரும் இது தான் பிக் பாஸிற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அவர் செய்த அந்த செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், முன்னாள் பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ” எங்கள் அன்பான பிக்பாஸ் செட் மீது செருப்புகளை வீசுவது பூர்ணிமாவால் மட்டுமே செய்யக்கூடிய மிக அவமரியாதை செயல். அந்த வீடு மிகவும் புனிதமானது. நான் மட்டும் இல்லை நான்  உட்பட பலருக்கு இது ஒரு மதிப்புமிக்க அடையாளத்தை அளித்துள்ளது. அந்த மாதிரி ஒரு புனிதமான வீட்டை வணங்குகிறேன்.

சம்பந்தமே இல்லாதவன் பைனல்ல இருப்பான்! பிக் பாஸ் ஐ கடுமையாக விமர்சித்த பூர்ணிமா!

அதனுடன் எனக்கு இருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு நிரந்தரமானது. யாராலும் அதனை பிரிக்க முடியாது. எனவே, அதனால் அவள் செய்தது தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தம் அளிக்கிறது கண்டிப்பாக  மன்னிக்க முடியாதது என்னை பொறுத்தவரை அவர் விஷ போட்டியாளர்” எனவும் கூறியுள்ளார்.  பூர்ணிமா ரவி இது மட்டுமின்றி சில முறை பிக் பாஸ் வீட்டை பற்றியும் விமர்சித்து பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

7 hours ago
GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

8 hours ago
RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

9 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

10 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

13 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

13 hours ago