நான் பழய அடியாள்.! நீ இப்போ புதுசா வந்துருக்க அடியாள்.! இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் டீசர்.!
இயக்குனர் பா.ரஞ்சிததின் நீலம் பட நிறுவனம் சார்பாக சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் ரைட்டர். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன் சார்பாக அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ரைட்டர். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிராங்க்ளின் ஜேக்கப் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
இப்படம் முதலில் OTTயில் ரிலீஸ் ஆகும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 24இல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தனது போலீஸ் டிபார்ட்மென்டால் தண்டனை தரப்பட்டு ரைட்டராக ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நுழையும் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி வருகிறார். அங்கு ஒரு கேஸ் வருகிறது அந்த கேஸ் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் ரைட்டர் சமுத்திரக்கனி என டீசர் வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. பட டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படமும் திருப்திபடுத்தினால், படம் நிச்சயம் ஹிட் ஆகும்.