நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!

samuthirakani about nadodigal 2

Samuthirakani நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். நடிகராக அறிமுகமான இவர் பல படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவர் இயக்கிய நாடோடிகள் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டானது.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் எம். சசிகுமார், பரணி, சாந்தினி தேவா, அனன்யா, அபிநயா , விஜய் வசந்த், நமோ நாராயணா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தையும் சமுத்திரக்கனி இயக்கி இருந்தார். இந்த இரண்டாவது பாகத்தில் எம்.சசிகுமார், சமுத்திரக்கனி, அஞ்சலி, அதுல்யா ரவி, நமோ நாராயணா, நமீதா மாரிமுத்து உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

read more- ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை?

ஆனால், முதல் பாகம் வெற்றி அடைந்த அளவிற்கு இந்த இரண்டாவது பாகம் வெற்றி அடையவில்லை என்றே கூறலாம். இந்த இரண்டாவது பாகம் தோல்வி அடைந்தது. இது குறித்து பேசிய அவர் ” நான் நாடோடிகள் படம் தோல்வி அடைந்த பிறகு பணம் கேட்டு வந்தவர்களுக்கு என்னால் முடிந்த பணத்தை உடனடியாக தயார் செய்து கொடுத்தேன்.

நாடோடிகள் 2 படத்தில் நடந்த அனுபவம் என்னுடைய மனதில்  அப்படியே இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அந்த படத்தின் தோல்விக்கு நான் இன்னும் கடன் கட்டி கொண்டு தான் இருக்கிறேன். இங்கு சினிமா கலையாக இல்லை யாரை யார் ஏமாற்றுவது என்பது தான் நடந்து கொண்டு இருக்கிறது.  என்னைக்காவது ஒரு நாள் எல்லாம் மாறும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested