Fact check: திருமண கோலத்தில் சமந்தா? மணப்பெண் போட்டோஸ் வைரல்…

Published by
கெளதம்

அச்சு அசலாக நடிகை சமந்தாவை போல் இருக்கும் மணப்பெண்னின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், இப்போது குணமாகி வருகிறார். இந்த நோயினால், சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுத்துகொண்டார். இதனால், இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்து விட்டது.

இருந்தாலும், அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில், ‘TAKE 20’ என்ற தனது ஹெல்த் போட்காஸ்டை வெளியிட்டார். இந்த போட்காஸ்ட் முதல் எபிசோடில், நடிகர் தனது விவாகரத்து குறித்து பேசிய அவர், நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்ததை ‘மிகவும் கடினமானது’ என்று விவரித்தார்.

READ MORE – மீண்டும் சினிமாவுக்கு வரும் சமந்தா.! முதல் படம் என்ன தெரியுமா?

SAMANTHA – Bridal Photo Shoot [fb\@EXPOSURE STUDIOS]
இதற்கிடையில், நடிகை சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் 2021 இல் பிரிந்ததாக அறிவித்தனர். இதனையடுத்து, நாக சைதன்யா இரண்டாம் செய்ய உள்ளதாகவும், செய்து கொண்டார் எனவும் ஒரு சில நேரங்களில் செய்திகள் பரவி உள்ளது. அது போல், அண்மையில் சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியானது.

READ MORE – கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி!

SAMANTHA – Bridal Photo Shoot [fb\@EXPOSURE STUDIOS]
இந்த நிலையில், சமந்தாவை செராக்ஸ் எடுத்தது போல அச்சு அசலாக ஒரே போல் இருக்கும் ஒரு திருமண பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த திருமண போட்டோ ஷூட் கடந்த 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஆனால், அந்த புகைப்படங்களை தற்பொழுது  சில நெட்டிசன்கள்இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

SAMANTHA – Bridal Photo Shoot [fb\@EXPOSURE STUDIOS]
கடைசியாக, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, வருண் தவான் நடிப்பில், ராஜ் மற்றும் டிகே இயக்கும் இந்தியன் சிட்டாடலில் நடிக்கிறார்.

Published by
கெளதம்

Recent Posts

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

3 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

4 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

4 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

5 hours ago

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…

5 hours ago

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

6 hours ago