சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூன் மாதம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தி பேமிலி மேன் சீசன்-2. இந்த சீரிஸை ராஜ் & டிகே ஆகியோர் இயக்கி இருந்தனர். மனோஜ் பாஜபாயீ ஹீரோவாக நடித்து இருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து இருந்தார்.
பிரபல பத்திரிக்கையான ஃபிலிம்பேர் வருடா வரும் ஹிந்தி, மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும். சென்ற வருடம் முதல் OTTகளில் வெளியாகும், சீரிஸ்களுக்கும் ஃபிலிம்பேர் விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், தி பேமிலி மேன் சீசன் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சீரிஸில் இலங்கையை சேர்ந்த ஒரு அமைப்பில் உள்ள தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருப்பார்.
சிறந்த நடிகராக ஸ்கேம் 1992 எனும் சீரிஸில் நடித்த ப்ரதீக் காந்திக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான் விருதும் ஸ்கேம்1992 இயக்குனர் ஹன்சல் மேக்தாவுக்கு வழங்கப்பட்டது. ஒரிஜினல் கதை, திரைக்கதைக்கான விருது தி பேமிலி மேன் சீசன் 1 மற்றும் தி பேமிலி மேன் சீசன் 2 சீரிஸுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது ஸ்கேம் 1992 சீரிஸுக்கு வழங்கப்பட்டது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…