இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கும் சமந்தா…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
உலக அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ உருவாக்கும் ‘Citadel’ பிரான்சைஸின் இந்திய தொடரில் நடிக்கிறார் சமந்தா.
இயக்குனர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸின் இயக்கத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஏஜிபிஓவின் சரவதேச நிகழ்வுத் தொடரான சிட்டாடல் (citadel) யுனிவர்ஸின் இந்திய தொடர் உருவாகவுள்ளதாகவும், படத்தில் நடிகை சமந்தா வருண் தவானுடன் நடிக்கவுள்ளதாக OTT நிறுவனமான பிரைம் வீடியோ சமந்தாவுடைய ஸ்டைலான புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது.
the mission is on ????
We have started rolling for the Indian installment of Citadel ????@Samanthaprabhu2 @rajndk @d2r_films @MenonSita @varun_dvn #RussoBrothers #agbofilms @AmazonStudios pic.twitter.com/lGzMlHzCEm— prime video IN (@PrimeVideoIN) February 1, 2023
போஸ்டரில் நடிகை சமந்தா ஒல்லியான-பிட் உடல் அமைப்புடன் தோல் ஜாக்கெட் அணிந்திருக்கிறார். ஏவியேட்டர் சன்கிளாஸ்ஸுடன் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) இயக்குகிறார்கள். இந்த தொடருக்கான தயாரிப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஹிந்தியில் ஷெஹ்சாதா படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியானால் சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது. எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.