என்னாச்சு..? ஆக்ஸிஜன் சிகிச்சையை எடுத்துக் கொண்ட சமந்தா! கலக்கத்தில் ரசிகர்கள்…
நடிகை சமந்தா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டதால், ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக, வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, இன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், மருத்துவமனையில் தான் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்ற போட்டோ, ஜிம்மில் வொர்க் அவுட் செய்த போட்டோ அடுத்த ஸ்லைடில் அவர் குதிரை சவாரி செய்யும் புகைப்படம், அதைத் தொடர்ந்து ஒரு சுவையான இனிப்பு என பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதில், ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்ற போட்டோவை பார்த்த பல ரசிகர்கள் சமந்தாவுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி கலக்கத்தில் உள்ளனர். ஆனால், நடிகை சமந்தா தான் இதுநாள் வரை சந்தித்த சந்தர்ப்பங்களின் புகைப்படங்களை தான் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அண்மையில், நடிகை சமந்தா யோசிடிஸ் என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இப்பொது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். அப்போது, தான் சிகிச்சை பெற்ற புகைப்படத்தை தான் அவர் பகிர்ந்துள்ளார்.