கணவரின் படம் வெற்றி பெற மலையில் நடுந்து சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
இவர்கள் இருவரும் மலையில் ஏறுவதற்கு எந்த விதமான வாகனத்தையும் பயன்படுத்தாமல்,படிகளில் சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும் , சமந்தாவும் நடித்து உள்ள திரைபடம் “மஜிலி”. இப்படத்தை இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி உள்ளார்.
இப்படம் வருகின்ற 5-ம் தேதி வெளியாக உள்ளது.படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் “மஜிலி” திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என நடிகர் நாக சைதன்யாவும் , சமந்தாவும் திருப்பதி எழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
இவர்கள் இருவரும் மலையில் ஏறுவதற்கு எந்த விதமான வாகனத்தையும் பயன்படுத்தாமல்,படிகளில் சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவர்கள் இருவரும் மனம் படத்தில் நடித்தபோது காதலார்களாக மாறிவிட்டனர்.பிறகு சில முன்பு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.