Samantha in hospital: மீண்டும் மருத்துவமனையில் சமந்தா! காரணம் இது தான்…வெளியானது அறிக்கை!

சமந்தாவுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பால் உண்டாகக்கூடிய ‘மயோசிடிஸ்’ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் அவர் தனது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். அப்போதிலிருந்து, அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
முன்னதாக, மயோசிடிஸ் நோயிக்கு சிகிச்சை பெறுவதற்காக, நடிப்பில் இருந்து சற்று ஓய்வெடுத்த சமந்தா, சிகிச்சையை பொறுப்பெடுத்தாமல், அவர் நடித்திருந்த “யஷோதா” திரைப்படத்தின் ப்ரோமஷன் பணியில் கலந்து கொண்டார். அப்போது, அவருடைய உடல்நிலை குறித்து தகவலை பகிர்ந்து கொண்டார்.
நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…சோகத்தில் ரசிகர்கள்..!
அந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்து, நடிகை சமந்தாவின் உடல் நிலை மெல்ல மேல சீராக தொடங்கியதும், கோவில்களுக்கு சென்று வழிபட தொடங்கினார். தற்போது, தனது உடல்நிலையில் அதிகமாக கவனம் செலுத்தி ஓய்வு வெடுத்து வந்த சமந்தா தற்போது, பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கிவிட்டார்.
அடிக்கடி ஜிம்மில் உடற்பயற்சி மேற்கொள்ளும் சமந்தா, ஆரோக்கியமாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். தற்பொழுது, சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார், மேலும் அதில் அதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிவித்துள்ளார்.
என்னாச்சு..? ஆக்ஸிஜன் சிகிச்சையை எடுத்துக் கொண்ட சமந்தா! கலக்கத்தில் ரசிகர்கள்…
அந்த அரியவகை நோயினால், பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா தற்போது சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பதிவில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூஸ்டரின் நன்மைகள் பற்றியும், அதன் குறிப்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நடிகை சமந்தா கடைசியாக இயக்குனர் சிவ நிர்வாணா இயக்கிய ‘குஷி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, மேலும் சச்சின் கேத்கர், முரளி சர்மா, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமந்தாவுக்கு நோய்வர நீங்க தான் காரணம்! விஜய் தேவரகொண்டாவிடம் வம்பிழுத்த பிரபல நடிகர்?
காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. சமந்தா அடுத்து வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025