சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 72 வயது அழகனுக்கு ஜோடியாக புதியப்படம்…
நடிகை சமந்தா, மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகவும் பிடித்தவர், மம்முட்டி” என்று குறிப்பிட்டுள்ளார்.
READ MORE – என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.!
மம்முட்டியின் ரசிகை என்று சமந்தா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மம்முட்டியின் காதல் தி கோர் படத்திற்கு அவர் அதிக பாராட்டுகளை வழங்கியதுடன் ‘மம்முட்டி சார்’ எனக்கு பிடித்த ஹீரோ என்று தெரிவித்திருந்தார்.
READ MORE – அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!
இந்த நிலையில், திடீரென மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததை வைத்து, இது அவருடன் நடிக்கும் புதிய திரைபடத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் என்று கிசுகிசுக்கத் தொடங்கினர். இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை, ஒருவேளை அது உண்மை என்றால் விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
READ MORE – குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க.!
நடிகை சமந்தா, சமீபத்தில் சினிமா திரையுலகில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு திரையுகில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டார். இப்படி, இருக்கையில் மம்முட்டியுடன் இணைவது பெரிய விஷயம் என்றாலும், அதனை நெட்டிசன்கள் 72 வயது நடிகருடன் நடிக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டதாக கேலி செய்து வருகிறார்கள்.
ஆனால், 72 வயதாகியும் இளமையாக தோற்றமளிக்கும் மம்முட்டி நடிப்பில் கலக்கி வருகிறார். அவரது சமீபத்திய திரைப்படமான பிரமயுகம், கேரளா மட்டுமன்றி அநேக இடங்கிலும் மாஸ் காட்டியது. இரண்டு வாரங்களில் இந்த படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.