எப்படி இருந்த சமந்தா.. இப்படி மாறிட்டிங்களே.? வெளியான புதிய விடியோவால் கலங்கிப்போன ரசிகர்கள்.!
நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான ‘மயோசிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் வெளியே எங்கும் செல்லாமல், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை ‘யசோதா’ படத்தின் ப்ரோமஷனின் போது தெரிவித்திருந்தார்.
சிகிச்சைக்காக சமந்தா தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதனையடுத்து, சிகிச்சை முடிந்து சமந்தா நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆம், சமந்தா மும்பை விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#சமந்தா வின் லேட்டஸ் புகைப்படங்கள்…!#Samantha | #SamanthaRuthPrabhu pic.twitter.com/yt0fewGuRk
— CineBloopers (@CineBloopers) January 6, 2023
வீடியோவில் சமந்தா உடல் எடை சற்று மெலிந்த தோற்றத்தில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்துள்ள கூலர்ஸ், போட்டுகொண்டு நடந்து செல்கிறார்.வீடியோவில் சமந்தா கொஞ்சம் கூட சிரித்த முகத்தில் இல்லாததால், “சந்தோஷமோ சிரிப்போ முன்பை போல சமந்தா முகத்தில் இப்போது இல்லை” எப்படி இருந்த சமந்தா.. இப்படி மாறிட்டிங்களே.? என சோகத்துடன் கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- என்னை சுத்தி சுத்தி அடிப்பாங்க…வேதனையுடன் பேசிய பிரபல கவர்ச்சி நடிகை.!
மேலும் நடிகை சமந்தா தற்போது ‘சாகுந்தலம்’ மற்றும் குஷி ஆகிய திரைப்படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் ‘சாகுந்தலம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.