சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா.? புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்.!
நடிகை சமந்தா எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால், கடந்த சில வாரங்களாக அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும், வெளியிடாமலே இருந்தார். இதனால் அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வருகிறார் எனவும் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டு தான் மயோசிடிஸ் மயோசிடிஸ் (Myositis) என படும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில் ” . சில மாதங்களுக்கு முன்பு எனக்கு (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. நிவாரணம் வந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது நேரம் எடுக்கும்.
நாம் எப்பொழுதும் வலுவான முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் மெதுவாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்வது நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒன்று. நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு…. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்…. மேலும் ஒரு நாளை என்னால் கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்றுதான் அர்த்தம் என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். சமந்தாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கு தகவலை அறிந்த ரசிகர்கள் சற்று அதிர்ந்து போய் சமந்தா குணமடைய வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் வரும் வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram