நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். சல்மான் கான் டைகர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அந்த திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அந்த திரைப்படத்தில் நடிக்க த்ரிஷா மறுப்பு தெரிவித்துவிட்டாராம். ஏனென்றால், தேதி பிரச்சனை காரணமாக அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அந்த மாதிரி படத்தில் நடிக்க முடிவெடுத்த அனுஷ்கா?
எனவே, த்ரிஷா மறுப்பு தெரிவித்துள்ள காரணத்தால் படக்குழு சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஏற்கனவே சமந்தா முன்னதாக சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார் என தகவல்கள் வெளியான நிலையில், அது முற்றிலும் வதந்தி என சமந்தா கூறிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் சல்மான் கானுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் நடிகை சமந்தா தற்போது சிட்டால் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…