தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி சல்மான் கான் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் டைகர் 3 (Tiger 3). இப்படத்தை தீபாவளி அன்றும் நேற்றும், வடமாநிலங்களில் சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
பதான் படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வந்தது போல, டைகர் 3 படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார். இயக்குனர் மனீஷ் சர்மா இந்த முறை முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் ‘டைகர் 3’ திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுக்க இரண்டு நாளில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு இரண்டு நாட்களில் 100 கோடியைத் தாண்டிய மூன்றாவது ஹிந்தித் திரைப்படம் டைகர் 3 ஆகும். இதற்கு முன்னதாக, பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் அந்த சாதனையை படைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
டைகர் 3 திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.43 கோடி, இரண்டாம் நாளான நேற்று ரூ.58 கோடி என மொத்தம் ரூ.100 கோடியை தண்டியுள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி நாளில் வெளியாகி வெறும் இரண்டே நாளில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதால், நடிகர் சல்மான் கான் நடித்துள்ள லேட்டஸ்ட் படங்களின் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
நம்ம தளபதி விஜயை தொட கூட முடியாத பாலிவுட் ‘கான்’ நடிகர்கள்கள் .! டைகர் 3 முதல்நாள் வசூல்.!
சல்மான் கான் நடித்துள்ள ‘டைகர் 3’ படத்தில் நடிகை கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோர் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் மனீஷ் ஷர்மா இயக்கிய இது பான் இந்திய திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…