நம்ம தளபதி விஜயை தொட கூட முடியாத பாலிவுட் ‘கான்’ நடிகர்கள்கள் .! டைகர் 3 முதல்நாள் வசூல்.!
தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சல்மான் கான் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் டைகர் 3. ஷாருக்கானை வைத்து 2016இல் பேன் (FAN) எனும் தோல்விப்படத்தை கொடுத்த இயக்குனர் மனீஷ் சர்மா இந்த முறை முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் டைகர் 3 திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இப்படத்தை நேற்று வடமாநிலங்களில் சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கினுள் உள்ளேயே பாட்டாசு வாணவேடிக்கை என கொண்டாடி பார்வையாளர்களை பதற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் தென் மாநிலங்களில் ஷாருக்கான் அளவுக்கு சல்மான் கானுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இல்லாத காரணத்தால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு , ஓப்பனிங் எதுவும் இல்லாமல் போனது.
அந்த முரட்டு சம்பவதிற்கு 11 வயது.! தளபதி விஜய் – A.R.முருகதாஸ்-இன் ‘மாஸ்டர் பீஸ்’ துப்பாக்கி.!
இப்படம் ஏக் த டைகர், வார், பதான் என யாஷ் ராஜ் பிலிம் யூனிவெர்ஸ் என லோகேஷ் சினிமா யூனிவெர்ஸ் (LCU) போல அறிவிக்கப்பட்டு வெளியானது. பதான் படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வந்தது போல, டைகர் 3 படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பு, பெரிய ஹிட் படத்தின் அடுத்த பாகம் என வெளியானதால் இப்படம் உலகம் முழுக்க முதல் நாள் 94 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இந்திய அளவில் முதல் நாள் வசூலில் 5ஆம் இடத்தையே பெற்றது.
முதலிடத்தில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் 148 கோடி வசூலுடன் உள்ளது. இரண்டாம் இடத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ் 140 கோடியுடனும், ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 129.6 கோடியுடனும், பதான் 106 கோடியுடன் 4வது இடத்திலும் உள்ளது.
படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருவதால், மிக பெரிய வசூல் வேட்டையை டைகர் 3 திரைப்படம் நடத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.