பத்திரிகையாளர் செல்போனை பிடுங்கிய சல்மான்கான்
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் மீது அசோக் ஷியாமிலல் பாண்டே என்ற பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை மும்பை ஜுகுவிலிருந்து காந்திவிலி செல்லும் சாலையில் அசோக் ஷியாமிலல் பாண்டே மற்றும் தன்னுடைய புகைப்படக்கலைஞர் இர்பானும் சென்று கொண்டிருந்த போது சல்மான்கான் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சல்மான்கான் உடன் பாதுகாவலர்களும் பைக்கில் வந்தனர். அதனால் பாதுகாவலர்களிடம் வீடியோ எடுத்து கொள்ளலாமா என அனுமதி கேட்டனர். பாதுகாவலர் அனுமதி கொடுத்த பின்புதான் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்கள்.
இந்நிலையில் காரில் இருந்து அசோக் ஷியாமிலல் வீடியோ எடுத்ததை பார்த்த சல்மான் வீடியோ எடுக்கக்கூடாது என எச்சரித்தார். பின்னர் பாதுகாவலர்களும் வீடியோ எடுக்கக்கூடாது என கூறினார்.
அதற்கு பதிலளித்த அசோக் ஷியாமிலல் பாண்டே உங்கள் அனுமதி உடன் தானே வீடியோ எடுத்தோம் என பேசிக்கொண்டு இருந்த போது திடீர்ரென சல்மான் அசோக் ஷியாமிலல் செல்போனை பிடுங்கிக்கொண்டார்.
பிறகு சிறிது நேரம் கழித்து பாதுகாவலர்கள் செல்போனை அவர்களிடம் கொடுத்து விட்டனர். இந்நிலையில் அசோக் ஷியாமிலல் செல்போனை பறித்தற்காக காவல்துறையிடம் புகார் கொடுத்து உள்ளார்.
சல்மான்கான் தரப்பில் அனுமதி இன்றி வீடியோ எடுக்கப்பட்டது என புகார் அளிக்கப்பட்டுள்ளது.