சீனாவில் தங்கல் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பஜ்ரங்கி பைஜான்!
சீனாவில் தங்கல் படத்தின் முதல் நாள் வசூலை நடிகர் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் மிஞ்சியுள்ளது. பாகிஸ்தானிய சிறுமி இந்தியாவில் தொலைந்துபோனபோது, பல தடைகளைக் கடந்து இந்தியர் ஒருவர் அவரை பாகிஸ்தானில் உள்ள குடும்பத்தில் சேர்க்கும் கதையை மையப்படுத்தியது பஜ்ரங்கி பைஜான்.
இந்தியாவில் பஜ்ரங்கி பைஜான் வெளியாகி 30 மாதங்களுக்குப் பிறகு சீனாவில் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது. சீனாவில் வெளியாகும் சல்மான்கானின் முதல் படமான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 18 கோடி ரூபாய் வசூலித்து பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது முதல் நாளில் தங்கல் படம் சீனாவில் வசூலித்த பதினான்கரை கோடி ரூபாயைக் காட்டிலும் அதிகம் ஆகும்.
சீனாவில் மட்டும் தங்கல் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், பாலிவுட் படங்கள் மீது சீனர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.