நடிகர் சல்மான் கான் கேட்டும் கிடைக்காத குதிரை …..இந்த குதிரையில் அப்படி என்ன சிறப்பு?

Default Image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் அரிய வகை குதிரையை ரூ.2 கோடிக்கு  விலைக்கு கேட்டும் அதனை குதிரையின் உரிமையாளர் மறுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு அருகிலுள்ள Olpad எனும் ஊரைச் சேர்ந்தவர் சிரஜ்கான் பதான், இவரிடம் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த குதிரை ஒன்று இருக்கிறது. 5 வயதான இக்குதிரையை கடந்த ஆண்டு ரூ.14.5 லட்சத்திற்கு வாங்கி வளர்த்து வருகிறார் பதான். இந்த குதிரையின் மூன்றாவது சொந்தக்காரர் பதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சகாப் (saqab) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குதிரையை பஞ்சாபை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் 1.11 கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டுள்ளார். எனினும், அவர்களிடம் குதிரையை விற்க பதான் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரமான நடிகர் சல்மான் கான் இந்த குதிரையை பற்றி கேள்விப்பட்டு இதனை வாங்க எண்ணியிருக்கிறார். சகாப் குதிரைக்கு 2 கோடி ரூபாய் விலை தருவதாகக் கூறி விற்பனைக்கு கேட்டிருக்கிறார் சல்மான் கான்.

இருப்பினும் தனது குதிரையை விற்பனை செய்வதில்லை எனக்கூறி அனுப்பியிருக்கிறார் பதான். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோயுள்ளனர்.

14.5 லட்ச ரூபாய்க்கு வாங்கிய குதிரையை 2 கோடி கொடுத்து வாங்குமளவுக்கு அது அவ்வளவு மதிப்பு வாய்ந்ததா என சிந்தனை எழலாம். இருப்பினும் இந்த குதிரை விலை மதிப்பற்றதே. ஏனெனில் இந்த குதிரையை போன்று ஒரே ஒரு குதிரை மட்டுமே இந்தியாவில் தற்போது உள்ளது.

அமெரிக்கா ஒன்றும், கனடாவில் ஒன்றும் மட்டுமே இக்குதிரைக்கான துணைகள் இருப்பதால், மிகவும் அரிய அல்லது அரிதிலும் அரிதான வகை குதிரையாக, சகாப் கருதப்படுகிறது.
Image result for salman khan horse intrest not sale
மணிக்கு 43 கி.மீ வேகத்தில் நடக்கும் திறன் பெற்ற இந்த குதிரையின் மீது சவாரி செய்யும் போது குதிரை மீது சவாரி செய்பவருக்கு எந்த வித இடர்பாடுகளும் ஏற்படாது என்பது இதனை உலகிலேயே அரிதான குதிரை என்ற சிறப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், இதுவரை சகாப் பங்கேற்ற 19 ஓட்டப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோற்றது இல்லை. எனினும் இந்த குதிரையை இதுவரையில் குதிரைகளுக்கான தொழில்முறை பந்தயங்களில் ஈடுபடுத்தியதில்லை.

சிந்தி இனத்தை சேர்ந்த இந்த குதிரையின் தாய், பாகிஸ்தான் சிந்தி இனத்தை சேர்ந்தது. இதன் தந்தை ராஜஸ்தானி சுதர்வளி இனத்தை சேர்ந்தது.

சகாப், மனிதர்களிடம் மிக நெருக்கமாக பழகும் குணமுடையது என்றும் அதனை பற்றி புகழ்வது அதற்கு மிகவும் பிடிக்கும் என பதான் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஒரு கண் வெள்ளையாகவும் ஒரு கண் கருப்பாகவும் காட்சியளிக்கும் இந்த குதிரை துரதிருஷ்டவசமானது என்று பலரால் நிராகரிக்கப்பட்டாலும், பதான் இக்குதிரையை வாங்கி வளர்த்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்