Categories: சினிமா

நாளை ஓடிடியில் வெளியாகிறது “சலார்” திரைப்படம்.!

Published by
கெளதம்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த மாதம் 22ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ‘சலார்’ வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. அதன்படி, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வசூலித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால், இந்தப்படத்தை மீண்டும் பார்க்க காத்திருந்த பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல் தினத்தன்று, Netflix இந்தியா தனது 2024 ஆம் ஆண்டிற்கான தெலுங்கு படங்களில் ஓடிடி லிஸ்டை வெளியிட்டது, இதில் சலார் படமும் அடங்கும்.

அதன்படி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஜனவரி 20 ஆம் தேதி) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. ஆனால், படத்தின் ஹிந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் குறிப்பிடவில்லை.

Recent Posts

இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

13 minutes ago

தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…

சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…

35 minutes ago

NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!

ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…

37 minutes ago

இயக்குநர் ஷங்கரை கண்கலங்க வைத்த ‘டிராகன்’ படத்தின் வசூல் செய்தது தெரியுமா?

சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…

1 hour ago

ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…

1 hour ago

பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!

துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…

2 hours ago