நாளை ஓடிடியில் வெளியாகிறது “சலார்” திரைப்படம்.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த மாதம் 22ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ‘சலார்’ வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. அதன்படி, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வசூலித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால், இந்தப்படத்தை மீண்டும் பார்க்க காத்திருந்த பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல் தினத்தன்று, Netflix இந்தியா தனது 2024 ஆம் ஆண்டிற்கான தெலுங்கு படங்களில் ஓடிடி லிஸ்டை வெளியிட்டது, இதில் சலார் படமும் அடங்கும்.
Get ready for the action extravaganza ????#SalaarCeaseFire streaming on @NetflixIndia from Jan 20 in Telugu, Kannada, Malayalam & Tamil.#Salaar #Prabhas #PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan @VKiragandur @hombalefilms @ChaluveG @IamJagguBhai @sriyareddy @RaviBasrur… pic.twitter.com/v3TjWND9Q7
— Salaar (@SalaarTheSaga) January 19, 2024
அதன்படி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஜனவரி 20 ஆம் தேதி) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. ஆனால், படத்தின் ஹிந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் குறிப்பிடவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025