கேஜிஎப் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். பிருத்விராஜ், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
ஆசையை காட்டி ஏமாத்திட்டாங்க! வேதனையில் நடிகை தமன்னா காதலன்?.
அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான அந்த டிரைலர் எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த டிரைலர் சில சாதனைகளையும் படைத்து வருகிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டிரைலர் 5 மொழிகளில் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் வெளியான எல்லா மொழிகளையும் சேர்த்து 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது எல்லா மொழிகளிலும் சேர்த்து 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுவரை பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்களின் ட்ரைலர் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்ப்பை கொடுத்தது இல்லை.
முதன் முறையாக வெளியான 1 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள், மற்றும் குறுகிய காலத்தில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது அவருக்கு இது தான் முதல் முறை. ட்ரைலரை போலே படத்திற்கான டீசரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த டீசரும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 144 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…