salaar part 1 – ceasefire [File Image]
கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த சலார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
லால்சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? வெளியான ஷாக்கிங் தகவல்!
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக படம் கவலையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியான காரணத்தால் படம் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த சலார் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…