சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!
சயிப் அலிகானை கத்தியால் குத்திய நபரை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறை வழுக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணமே மும்பை பாந்த்ராவில் உள்ள அவருடைய வீட்டில் இரவில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அவரை கொடூரமாக கத்தியை வைத்து குத்தினார்.
சரியாக சயிப் அலிகான் வீட்டில் இரவில் ஒரு 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்திருக்கிறார். அந்த திருடனை உடனடியாக பார்த்த சயிப் அலிகான் யார் நீ என்பது போல கேட்டிருக்கிறார். அப்போது 2 பேருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் ஆத்திரம் அடைந்த அந்த திருடன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சயிப் அலிகானை கொடூரமாக தாக்கியுள்ளார்.
சயிப் அலிகானை 6 இடங்களில் திருடன் குத்தியதாகவும், மொத்தம் 2 குத்து, உடலில் ஆழமாக பாய்ந்துள்ளதாகவும் காலையில் இருந்தே செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது. கத்திக் குத்தில் காயமடைந்த சயிப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நரம்பியல் நிபுணர் நிதின் டாங்கே உள்ளிட்டோர் கொண்ட மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சையை செய்து வருகிறார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை. வீட்டிற்கு நுழைந்த போது அந்த திருடனின் முகம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதனை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில், இந்த சம்பவம் நடைபெற்றபோது திருடன் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தற்போது பரபரப்பான தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. சைஃப் அலி கானினிடம் வேலை செய்யும் ஊழியர்களை முதலில் வீட்டிற்குள் நுழைந்த அந்த திருடன் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். அடுத்ததாக, சாய்ஃப் அலி கானின் மகன் ஜெ தூங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குள் நுழைந்தார்.
பின் மீண்டும் ஒரு கோடி ரூபாய் கேட்டு வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவரையும் கன்னத்தில் அறைந்துள்ளார். அது மட்டுமின்றி தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண்ண்ணுக்கு அவரது மணிக்கட்டு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இதன் பிறகு சத்தம் கேட்டவுடன் தான் சயிப் அலிகான் வெளியே வந்து விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, வீட்டில் பணிபுரியும் 56 வயதான எலியாமா பிலிப் என்ற செவிலியர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.