2 கோடி சம்பளத்தை வேண்டாம் என்று கூறிய சாய் பல்லவி
நடிகை சாய்பல்லவி தனுசுடன் “மாரி2” படத்தில் நடித்து அந்த படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடலின் மூலம் செம்ம பேமஸ் ஆனார். இந்நிலையில் இவரை பெண்களின் முக அழகை மேம்படுத்தும் கீரீம் விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்களாம். இவர் உடனே நான் அதில் நடிக்க மாட்டேன் எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். அவர் நடிக்கும் படங்களில் கூட அவர் மேக்கப் போடுவதில்லையாம். மேலும் அவர் இயற்கையான அழகை தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். இந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு அவருக்கு 2 கோடி சம்பளம் பேசபட்டதாம்.