மேக்கப் போடாமல் போஸ் கொடுக்கும் ‘சாய் பல்லவி’..ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!!
நடிகை சாய் பல்லவிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவரை பலருக்கும் பிடிக்க காரணமே அவர் அதிகமாக மேக்கப் போட்டுக்கொள்ளமாட்டார். இதனால் என்னவோ அவர் இளைஞர்களின் பேவரட் நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது காலையில் எழுந்தவுடனே மேக்கப் கூட போடாமல் இயற்கையை ரசித்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது. சாய்பல்லவியின் பெயர் தான் ட்வீட்டரின் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மேலும் நடிகை, சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க ராஜ்குமார் பெரிய சாமிஇயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
View this post on Instagram