சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி…? அவரே கொடுத்த சூப்பர் விளக்கம்.!
நடிகை சாய்பல்லவி கடைசியாக கார்க்கி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சாய் பல்லவி எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இதனால், சாய் பல்லவி நடிப்பில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தகவல் பரவியது.
ஏனென்றால், நடிகை சாய் பல்லவி, ஜார்ஜியாவில் மருத்துவ படப்பிடிப்பு படித்திக்கொண்டிருந்த போது தான் இவருக்கு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடித்துக்கொண்டே படப்பிடிப்பையும் முடித்தார்.
இதையும் படியுங்களேன்- முதல் பாதியை குறைத்திருக்கலாம்…’வாரிசு’ படத்தின் விமர்சனம் இதோ.!
எனவே, நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் மருத்துவமனை ஒன்று கட்ட திட்டமிட்டுள்ளாதாகவும்,படித்த படிப்பை வீணாக்க கூடாது என்று எண்ணி சாய் பல்லவி மருத்துவமனை கட்டி அதை மட்டுமே கவனித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் சினிமாவில் இருந்து விளங்குவதாகவும் தகவல்கள் பரவியது.
இதனையடுத்து, நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் MBBS படித்திருந்தாலும் நடிகையாக வேண்டும் என்பதே என்னுடைய நீண்ட நாள் ஆசை. சினிமாத்துறைக்கு நான் வருவதற்கு என்னுடைய பெற்றோர்களும் சம்மதித்து விட்டனர். எனவே, எனது கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் விரும்ப வேண்டும். நல்ல கதைகள் அமைந்தால் எந்த மொழியிலும் நடிக்க தயார் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “SK24” படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.