கேரள நடிகை சாய்பல்லவி சமிபத்தில் வெளியான பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த கேரள சினிமா மற்றும் தமிழக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் என்று கூறினால் அது மிகையாகாது. அதன்பின் அவர் நடித்த சில படங்கள் வெற்றிப் பெறாவிட்டாலும் அவருக்கான மவுசு இன்னும் தமிழக மற்றும் கேரள சினிமாவில் தற்போது வரை குறையாமல் உள்ளது.தற்போது சாய் பல்லவி நடிப்பில் என்.ஜ.கே படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் மே மாதம் 31 ஆம் தேதி இந்தப் படம் வெளியாவதை அடுத்து படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
சமீபத்தில் பிரபல நேர்காணல் ஒன்றில் சாய்பல்லவியிடம் அவர் படித்து வந்த மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போனது குறித்துக் கேள்வி எழுப்பினர்,அதற்கு அவர் தெரிவித்ததாவது ,‘நான் தற்போது பயிற்ச்சி செய்ய மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. என்னிடம் இருந்த சில திறமைகள் என்னை விட்டு மறைந்து போவதை என்னால் உணர முடிகிறது.நான் மருத்துவமனைக்கு இப்போது சென்றால் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் யாரும் நான் எழுதி தரும் மருந்து சிட்டை வாங்கமாட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் ரசிகர்களிடம் நகைச்சுவை கலந்த அனுதாபத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…