பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக சாய் காயத்ரி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். பிறகு சில காரணங்களால் அவர் விலக, அந்த கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடிக்க வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நிலையில், தற்போது தான் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
சீரியலில் இருந்து விலகுவது குறித்து சாய் காயத்ரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது ” நான் உண்மையில் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக இந்த கேரக்டரில் நடிப்பது எனக்கு சரியாக இல்லை.
வரவிருக்கும் கதையின் வரி என்னையும் எனது கேரியரையும் நம்பவைத்து நியாயப்படுத்தவில்லை. எல்லா வழிகளிலும் என்னை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றி, எனது முடிவை ஏற்று மதித்த விஜய் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ” என பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…