பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Default Image

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக சாய் காயத்ரி  தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். 

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். பிறகு சில காரணங்களால் அவர் விலக, அந்த கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி  நடிக்க வந்தார்.

sai gayathri pandian stores
sai gayathri pandian stores [Image Source : Twitter]

கடந்த சில மாதங்களாகவே சாய் காயத்ரி  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நிலையில், தற்போது தான் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Sai Gayathri Bhuvanesh
Sai Gayathri Bhuvanesh [Image Source : Twitter]

சீரியலில் இருந்து விலகுவது குறித்து சாய் காயத்ரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது ” நான் உண்மையில் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக இந்த கேரக்டரில் நடிப்பது எனக்கு சரியாக இல்லை.

வரவிருக்கும் கதையின் வரி என்னையும் எனது கேரியரையும் நம்பவைத்து நியாயப்படுத்தவில்லை. எல்லா வழிகளிலும் என்னை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றி, எனது முடிவை ஏற்று மதித்த விஜய் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ” என பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்