பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘சலார்’ திரைப்படம், டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
முன்னதாக, சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் தாமதத்திற்குப் பிறகு இப்போது அதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது, படக்குழு புதிய போஸ்டருடன் சலார் வெளியீட்டு, டிசம்பர் 22, 2023 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. என்னதான் படக்குழு பண்டிகை தினத்தை குறி வைத்து வசூல் வேட்டை நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தாலும், ஏற்கனவே அங்கு ஒருத்தன் தன்னுடைய கால் பதித்து விட்டான் என்று தெரியவில்லை போல.
அட ஆமாங்க…பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்திருக்கும் ‘டுங்கி’ திரைப்படம் டிசம்பர் 22, 2023 அன்று வெளியாகிறது என்று படக்குழு முன்பே அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த முதல் திரைப்படம் டுங்கி. முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே மற்றும் சஞ்சு போன்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களை பாலிவுட்டில் வழங்கியுள்ளார் ராஜ்குமார் ஹிரானி .
இந்நிலையில், பாலிவுட்டில் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தொடர்ந்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியாக பதான் – ஜவான் ஆகிய இரண்டு படங்களும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால், பாகுபலி ஹீரோ பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம், அதிபுருஷ் என தோல்வியை படங்களை வழங்கி பாலிவுட்டில மார்க்கெட் இழந்துள்ளார்.
இப்படி இருக்கையில், டிசம்பர் 22, 2023 அன்று டுங்கி படத்துடன் சலார் திரைப்படம் மோதவுள்ளதால், என்ன நடக்க போகிறது என கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…