பாகுபலி பிரபாஸின் சாஹோ படத்துடன் மோத தயாரான கோமாளி!
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி எனும் படம் தயராகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால கட்டத்தில் கதை நகர்வுக்கு ஏற்றார் போல இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்பட போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே நாளில் தான் பாகுபலி பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் சஹோ படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.