ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டா போதாது…அதையும் பண்ணனும்! நடிகர் எஸ்.வி சேகர் பேச்சு!

S Ve Shekher gnanavel raja

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் ஞானவேல் ராஜா அமீரை பற்றி கடுமையாக தாக்கி பேசியது தான். கணக்கு விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இதனையடுத்து, ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள். அதன் பிறகு வருத்தம் தெரிவித்து ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார். ஆனால், வருத்தம் தெரிவிப்பது எல்லாம் பெரிய விஷயம் இல்லை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் மீண்டும் அறிக்கையை வெளியிட்டார்கள்.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

இந்த நிலையில், இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராதா நிலையில், இந்த விவகாரம் குறித்து அமீருக்கு ஆதரவாக இன்னும் பிரபலங்கள் தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து சேரன், இயக்குனர் நந்தா பெரியசாமி உள்ளிட்ட பலரும் ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

அதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகரான எஸ்.வி சேகர்  சமீபத்தில் ‘எமகாதகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அமீர்- ஞானவேல் ராஜா விவகாரம் குறித்தும் பேசினார். அதில் பேசிய  எஸ்.வி சேகர் ” சினிமாவில் எனக்கு ரொம்பவே பிடித்த ஒரு நபர் என்றால் அது அமீர் தான். அமீர் என்றால் முஸ்லீம் பெயர் அதனை மறைக்காமல் வெளியே சொல்லும் தைரியமான ஒரு நபர் அவர்.

சினிமா என்றால் அதற்கு சாதி, மதம், மொழி என இதில் எதுவுமே இல்லை.  என்னை பொறுத்தவரை இப்படி இருக்கும் சினிமாவில் சமீபத்தில் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட்டிருக்க கூடாது. அமீரை பற்றி ஞானவேல் ராஜா இப்படியெல்லாம் பேசியது ரொம்ப தவறாக இருக்கிறது. ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு தான் கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிப்பது யார் யார்க்கு என்று ஒன்று இருக்கிறது.

ஒருவரை நமக்குக்கு பிடித்திருக்கிறது அவன் நமக்கு பிடித்ததை செய்தால் அவனை புகழ்ந்து பேசனும், பிடிக்காதத ஒருவன் செஞ்சிட்டா என்ன வேணா பொதுவெளியில் பேசலாம் என்பது தவறான ஒரு விஷயம். எனவே, ஞானவேல் மன்னிப்பு கேட்பதோடு அவர்  பேட்டி கொடுத்த வீடியோவையும் டெலிட் செய்யவேண்டும் என எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்