இயற்கை, புறம்போக்கு கண்ணீரை வரவழைத்தன.! எனது சாபமும், வரமும் அதுதான்.! எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா.!

Published by
மணிகண்டன்

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு, லாபம் என கம்யூனிச சித்தாந்தத்தை தனது திரைப்படைப்புகள் மூலம் அழுத்தமாக பதிவிட்டவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். கடந்த மார்ச் மாதம் இவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நினைவாக திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் அவருக்கு முழு உருவ சிலை நிறுவும் விழா நேற்று நடைபெற்றது. இதில், மூத்த அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சிலையை திறந்துவைத்தார். உடன் நடிகர் விஜய் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுகவை சேர்ந்த மல்லை சத்யா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

விஜய் சேதுபதி பேசுகையில், ‘ என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் அவரது படத்தை நான் தயாரித்தது. எனக்கு கிடைத்த சாபம் அது அவரின் கடைசி படமாக அமைந்தது தான். கம்யூனிசத்தை செயல்களில் மூலமும் வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து காட்டியவர் எஸ்.பி.ஜனநாதன். அவரது சிலையை பொதுவெளியில் வைக்க கையெழுத்து இயக்கம் நடத்தவேண்டும்.’ என பேசியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் குறித்து பேசுகையில், ‘ இயற்கை, புறம்போக்கு திரைப்படங்களை பார்க்கும் போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. புறம்போக்கு படம் பற்றி பேசும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் , விஜய் சேதுபதி இவ்வளவு சாதாரமாக இருக்கிறார்களே என நினைத்து ஆச்சர்யப்பட்டேன். கம்யூனிச கருத்துக்களை தனது படங்கள் மூலம் பேசியவர். ‘ என பேசியிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ‘திரைத்துறை போன்ற கடினமான இடத்திலும் வெற்றிகரமாக தனது தத்துவங்களை பேசியவர் ஜனநாதன். இன்னும் 10 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருந்தால் இந்திய அளவில் கம்யூனிஸம் குறித்த கருத்துகளை தனது திரைப்படங்கள் மூலம் கொண்டு சென்றிருப்பார்.’ என பேசி முடித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

30 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

42 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

46 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago