டயலாக் பேசாமலே மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.., பட்டையை கிளப்பும் ‘சர்தார் 2’ டீசர்.!
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார் - 2' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “சர்தார் 2” தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சர்தார்” திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ‘சர்தார்’ படம் பெறும் வெற்றியை பெற்றிருந்தது. இதன் காரணமாக படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்தது.
அதன்படி, இன்று காலை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து இப்பொது டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் கார்த்தியைத் தவிர, ரஜிஷா விஜயனும் இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்கிறார். டீசரில், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா டயலாக் பேசாமலே மிரட்டுகிறார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தியின் அப்பா கதாபாத்திரத்தை டீசர் விவரிக்கிறது.
இறுதியில், ஹீரோ கார்த்தியின் சர்தார் சந்திரபோஸுக்கும், எஸ்.ஜே. சூர்யாவின் வில்லன் கதாபாத்திரமான ‘தி பிளாக் டாகர்’-க்கும் இடையிலான ஒரு மோதலுடன் முடிவடைகிறது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், யோகி பாபு மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோரும் நடிக்கின்றனர். அவர்களை தவிர இந்தப் படம் படப்பிடிப்பு றுதிக் கட்டத்தில் உள்ளது. இதனால், படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.