அஜித்தின் வாலி படத்தால் நீதிமன்றம் வரை சென்ற எஸ்.ஜே.சூர்யா.! ஏமாற்றமளித்த தீர்ப்பு.!
வாலி படத்தின் ஹிந்தி ரீமேக்கை எதிர்த்து இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவில்லை.
அஜித் இரட்டை வேடத்தில் நடித்து 1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இது தான் இவரது முதல் திரைப்படம். படத்தின் கதை எப்படி இருந்தாலும், அதனை தனது இளமையான திரைக்கதை மூலம் அனைவரும் ரசிக்கும் படி திறமையாக இயக்கி இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இந்த திரைப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பிய போனி கபூர் வாலி படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்றுவிட்டு, ரிமேக் வேளைகளில் இறங்கினார்.
தமிழ் திரையுலகில் ஒரு வழக்கம் உண்டு, அதாவது ஒரு படத்தை டப்பிங் செய்து வேறு மொழிகளில் வெளியிட்டால், அதற்க்கு தயாரிப்பு தரப்பு இயக்குனருக்கு எதுவும் தர தேவையில்லை. ஆனால், ரீமேக் செய்ய முற்பட்டால் இயக்குனருக்கு கணிசமான பங்கு தயரிப்பு நிறுவனம் இயக்குனருக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால், வாலி பட ரீமேக்கில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அப்படி எந்த பங்கும் தரவில்லை. இதனால், உயர் நீதிமன்றத்தில், வாலி பட ரீமேக் தொடர்பாக போனிகபூருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சாதகமா தீர்ப்பு வரவில்லை. படத்தின் ரீமேக் உரிமை தயாரிப்பு தரப்பை சார்ந்தது அதில், இயக்குனருக்கு எந்தவித உரிமையும் இல்லை என தீர்ப்பு வெளியாகியுள்ளது.