விஜய்யை அறிமுகம் செய்ய இதுதான் காரணம்…மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்.!
நடிகர் விஜய் பற்றி அவருடைய தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது “நான் கடவுள் இல்லை” என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நான் கடவுள் இல்லை பட ப்ரோமோஷன்
இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அப்போது விஜய் பற்றி பேசியுள்ளார்.
விஜய் எப்போதும் எனக்கு குழந்தை – எஸ்.ஏ.சந்திரசேகர்
எல்லோரோட குடும்பத்துலையும், ஆண் மகனுக்கு தாயை தான் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அப்படி இல்லை விஜய்க்கு என்னை மட்டும் தான் ரொம்பவே பிடிக்கும். நாங்கள் இரண்டே பேருமே எபோதும் அதிகமாக பேசிக்கொள்ளவே மாட்டோம். ஆனால் எங்களுக்குள் பாசம் இருக்கும்.
பிரச்சனை என்பது என்னிடம் தான் இருக்கிறது. விஜயிடம் எந்த பிரச்சனையும் இல்லை. விஜய் இப்போது பெரிய ஆளாக இருக்கலாம் ஆனால் என்னுடைய கண்ணனுக்கு அவர் எப்போதும் குழந்தை தான்.
விஜய்யை அறிமுகம் செய்ய இதுதான் காரணம் – எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் என்னுடைய மகன் என்பதெல்லாம் அப்புறம் தான். ஏனென்றால், இந்த படத்தோட போய்விடக்கூடாது, அப்பாவாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு பொறுப்பு எனக்கு இருந்தது. விஜய்க்கு நடிப்பில் தான் விருப்பம். விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு படத்தை இயக்கினேன்.
இந்த திரைப்படம் பெரிய அளவு போகவில்லை. பிறகு அவனுக்குள்ள ஒரு நடிகன் இருக்கிறான் என்று புரிஞ்சிக்கிட்டேன். நாளைய தீர்ப்பு படப்பிடிப்பு முடிந்தவுடன் என்னுடைய மனைவியிடம் சொன்னனேன். இந்த படம் ஓடுதோ இல்லையோ உன்னுடைய மகன் பெரிய ஹீரோவாக ஆய்டுவான் என்று. அதைபோல் இப்போது நடந்துவிட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.