இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை கண்டுகொள்ளாத சித்தார்த்!! இது தான் காரணமா?

Default Image

இந்தியன் 2 : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, மார்க் பென்னிங்டன், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், ஷங்கர்,கமல்ஹாசன், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், நெல்சன், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன், சிம்பு, அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். ஆனால், படத்தில் ரொம்பவே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்தார்த் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

சித்தார்த் வராததற்கு காரணம் என்ன என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழும்பி இருக்கும் நிலையில், இதற்கான தகவல் ஒன்றும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், படத்தில் கமல்ஹாசனை காப்பாற்றுவதே நடிகர் சித்தார்த் தானாம். எனவே, தன்னுடைய கதாபாத்திரம் படத்தில் பெரிய அளவில் இருக்கிறது எனக்கும் ப்ரோமோஷன் போது அதிகமான ப்ரோமோஷன் செய்தால் தான் நான் வருகை தருவேன் என்று கூறினாராம்.

கமல்ஹாசனுக்கு எந்த அளவுக்கு ப்ரோமோஷன் செய்கிறீர்களோ அதே அளவுக்கு எனக்கும் ப்ரோமோஷன் கொடுக்கவேண்டும் என்று சித்தார்த் தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். இதனால் தயாரிப்பு நிறுவனம் ஒற்றுக்கொள்ளாத காரணத்தால் தான் சித்தார்த் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தரவில்லை என்று தகவல் பரவி வருகிறது.

மற்றோரு பக்கம்  சித்தார்த் படங்களில் கமிட் ஆகி இருப்பதால் வெளிநாட்டில் இருக்கிறார் அதன் காரணமாக கூட இசை வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாமல் போயிருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. உண்மையில், எந்த காரணத்தால் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தரவில்லை என்பதை சித்தார்த் சொன்னால் மட்டும் தான் தெரியவரும். கண்டிப்பாக இதனை பற்றி அவர் விளக்கம் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்