ரூ.10 கோடி நஷ்ட ஈடு வேண்டும்! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அனுப்பிய நோட்டீஸ்!

A. R. Rahman

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல்  30-ஆம் தேதி வரை அறுவை சிகிச்கை நிபுணர்கள் தலைமையில் மாநாடு இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அந்த இசையை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்து நடத்தலாம் என திட்டமிட்டு அவரிடம் பேசி அதற்கான முன்பணமாக 29.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிறகு இந்த இசை நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி கொடுக்கவில்லை.

இதனையடுத்து, தான் வாங்கிய முன்பன தொகையை திருப்பி கொடுக்கவில்லை பணத்தை திருப்பி கொடுங்கள் என ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறுவை சிகிச்கை நிபுணர்கள்  சங்கம் கடிதம் ஒன்றை எழுதினார்கள். பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கான காசோலையை கொடுத்துள்ளார். ஆனால், அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் காசோலை திரும்ப வந்துள்ளது.

பிறகு,  ஏ.ஆர்.ரஹ்மானிடம் தாங்கள் கொடுத்த அந்த முன்பண தொகையை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக திரும்பி தரும்படி கேட்டுவருவதாகவும், இன்னும் பணம் திரும்பி வரவில்லை எனவும் இதனால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் அவருடைய உரிமையாளரான செந்தில்வேலவன்  ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அந்த முன்பண தொகையை  பெற்று தரவேண்டும் என சென்னை போலீஸ் ஆணையரகத்தில் அறுவை சிகிச்கை நிபுணர்கள்  சங்க நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில்,மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, தன்னுடைய மீது அறுவை சிகிச்கை நிபுணர்கள்  சங்க நிர்வாகி அளித்துள்ள புகாருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் “கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன் பணம் வாங்கி அதனை திரும்பி கொடுக்கவில்லை என்று நோட்டிஸ் அனுப்பு உள்ளது அவருடைய புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருக்கிறது. எனவே அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்தால் 15 நாட்கள் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் அதோடு 10 கோடி நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டும்” எனவும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே கடந்த மாதம் 10-ந் தேதி சென்னை ஈ.சி.ஆரில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசைக்கச்சேரி நடைபெற்றது. அந்த இசைக்ச்சேரியில்  அளவுக்கு அதிகமான டிக்கெட்கள் விற்கப்பட்டு கூட்டம் கூடினார்கள். இதனால் பலரும் பாதிலேயே இதை கச்சேரியில் இருந்து வெளியேறினார்கள். இது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நினைவை, ரஹ்மான் டிக்கெட்டுக்கான காப்பியை அனுப்புங்கள் பணம் தருகிறேன் என்று கூறிருந்தார். அந்த சர்ச்சை இப்போது தான் முடிந்த நிலையில், தற்போது ரஹ்மானுக்கு அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்