பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம் இந்த இரு பெரும் தலைவர்களை பற்றியதுதானா?! வெளியான தகவல்கள்!!!
- பாகுபலி படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக RRR என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
- இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து வருகின்றனர்
- இரு நடிகர்களுமே ராஜமௌலி இயக்கத்தில் நடித்துள்ளனர்.
பாகுபலி படங்கள் மூலம் உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி 3 ஆம் பாகம் உருவானால் நான் அதில் கண்டிப்பாக நடிக்க ஆவலாக உள்ளேன் என ஹாலிவுட் முன்னனி நடிகரே கேட்டுக்கொண்ட பெருமை இந்த பாகுபலியையே சாரும். அந்தளவிற்கு இந்த படங்கள் உலகளவில் கவனம் ஈர்த்தன.
தற்போது அதே போல மற்றுமொரு பிரமாண்ட படத்தை இரண்டு முன்னனி ஹீரோக்களை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இந்த படத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து வருகின்றரர்.
இப்படம் 1920இல் நடக்ககூடி காலகட்டத்தில் உருவாகிறதாம். அந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய அல்லுரிசீதாராமராஜூ மற்றும் கோமரம்பீம் ஆகியோரை பற்றிய கதைக்களமாம்.
DINASUVADU