24 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் இமாலய சாதனையை முறியடித்த ஆர்.ஆர்.ஆர்.!
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடியும், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
வசூலையும் தாண்டி இந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதுகளையும் குவித்து வருகிறது. சமீபத்தில் கூட வெளிநாட்டில் உயர் விருதாக கருபதப்படும் நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதை ராஜமௌலி வென்றார். எனவே விருதுகள் மூலமே படம் இன்னும் பலசாதனைகள் படைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- மாரி பட இயக்குனரை ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.?
அதற்கு முன்னதாக, ஜப்பானில் இப்படம் பிளாக்பஸ்டராக மாறியுள்ளது. ஆம், ஜப்பானில் இந்த திரைப்படம் அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது. அங்கேயும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. அதன்படி, ஜப்பானில் வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 410 மில்லியன் (சுமார் ரூ. 24 கோடி) அதிகமாக வசூலித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையும் இந்த படம் படைத்துள்ளது. இதற்கு முன்பு ஜப்பானில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் வைத்திருந்தது. இதனையடுத்து, கிட்டத்தட்ட 24-ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முறியடித்துள்ளது.