வசூலை தாண்டி விருதுகளை குவிக்கும் RRR.! வெளிநாட்டு உயர் விருதை தட்டி தூக்கிய ராஜமௌலி.!
நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக எஸ்எஸ் ராஜமௌலி சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.
இயக்குனர் ராஜா மௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர் ” தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக கடந்த மார்ச் மாதம் வெளியானது.
எல்லா மொழிகளிலும், இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 2023-க்கான ஆஸ்கார் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், வெளிநாட்டில் உயர் விருதாக கருபதப்படும் நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதை ராஜமௌலி வென்றார். இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ராஜமௌலிக்கு எதிராகப் போட்டியிடும் இயக்குநர்களின் பட்டியலில் ஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டேரன் அரோனோஃப்ஸ்கி, சாரா பாலி மற்றும் ஜினா பிரின்ஸ்-பிளைத்வுட் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@SSRajamouli
wins the prestigious New York Film Critics Circle Award for the Best Director! #Rajamouli | #RRRMovie | #RRR pic.twitter.com/h1cVOaPlfp— CineBloopers (@CineBloopers) December 3, 2022