பாகுபலி இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள RRR படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.
பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து உலக சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் S.S.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் அடுத்து என்ன பிரமாண்டம் வெளியாகி ரசிகர்களை ஆச்ரயப்படுத்த போகிறதோ என எதிர்பார்த்து காத்திருக்கையில் RRR எனும் பிரம்மாண்டத்தை அறிவித்தார் ராஜமௌலி.
இந்த RRR-இல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் NTR, ராம் சரண், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், கோலிவுட்டில் இருந்து சமுத்திரக்கனி என திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்து, சில தடவை ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டு, இறுதியாக ஜனவரி 7ஆம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்து விட்டனர்.
இந்த படத்தின் ட்ரைலர் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதுவும் மாற்றப்பட்டு இன்று (டிசம்பர் 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்ட்டது.
இந்த பிரம்மாண்டத்தின் முன்னோட்டம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடந்த நேரத்தில் தற்போது இந்த ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
இந்த ட்ரைலர் மூலம், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர போராட்டம், ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் இணைந்து போராடுவது என காட்டப்பட்டுள்ளது. ஜூனியர் NTR சொந்த குரலிலேயே தமிழுக்கும் டப்பிங் பேசியுள்ளார். ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் தியேட்டருக்கு எப்போது வரும் என ஜனவரி 7ஐ எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…