சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், படத்தினை ஆர்.ஆர்.ஆர் படத்தினை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் படம் மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த சூழலில், தளபதி 69 படத்தில் இருந்து டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விலகிவிட்டதாம். அதற்கு முக்கிய காரணமே விஜய் அதிகமான தொகையை சம்பளமாக கேட்டது தானாம். கிட்டத்தட்ட தளபதி 69 படத்தில் நடிக்க சம்பளமாக 250 கோடி வேண்டும் என்று கேட்டுவிட்டாராம். இவ்வளவு தொகை கேட்டதும் டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சற்று அதிர்ச்சியாகிவிட்டதாம்.
அதிர்ச்சி ஆகி சம்பளத்தை கொஞ்சம் குறைக்கலாமா என்பது போல விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால், சம்பத்தை குறைக்க முடியாது என்பது போல விஜய் கூறிவிட்டாராம். இதனால் சற்று கடுப்பான டிவிவி என்டர்டெயின்மென்ட் படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை என்று பின் வாங்கிவிட்டதாம். எனவே, தளபதி 69 -படத்தை வேறு தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க முன் வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
எனவே, கோட் படம் வெளியான பிறகு தளபதி 69 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அப்போது படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்பதும் தெரிய வரும். மேலும், தளபதி 69 க்ரைம் கதையம்சத்தை கொண்ட படமாகவும், அரசியல் கலந்த படமாகவும் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…