ஆர்ஆர்ஆர் படக்குழுவின் “ஆஸ்கர்” கனவு நினைவானது….இசையமைப்பாளர் கீரவாணி நெகிழ்ச்சி.!
95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.
இந்த நாட்டு நாட்டு பாடலை சந்திரபோஸ் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும், இந்த பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட போதே பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா என்ற கனவுடன் ஆர்.ஆர்.ஆர் படக்குழு இருந்தது.
‘Naatu Naatu’ from ‘RRR’ wins the Oscar for Best Original Song! #Oscars #Oscars95 pic.twitter.com/tLDCh6zwmn
— The Academy (@TheAcademy) March 13, 2023
இதனையடுத்து, தற்போது பாடல் ஆஸ்கர் விருதை தட்டி சென்றுள்ளதால் ஆர்.ஆர்.ஆர் படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இசையமையாளர் கீரவாணி கனவு நினைவாகியுள்ளதாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய கீரவாணி ” நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் கனவு நனைவாகியுள்ளது. எனக்கு மட்டும் இல்லை. ராஜமௌலி உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினரின் கனவும் நினைவாகியுள்ளது” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அவரை தொடர்ந்து பேசிய ராஜமௌலி ” நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.