suriya and vikram [File Image]
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதன் பின், இந்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரம் டப்பிங் பணிகளை தொடங்கினார். இருப்பினும் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டு இருந்தது. பிறகு இறுதியாக படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் பரவி வருகிறது. அதன்படி, படத்தின் இயக்குனர் கெளதம் மேனன் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் தான் கூறினாராம். ஆனால், சில காரணங்களால் படத்தில் நடிக்க நடிகர் சூர்யா மறுத்துவிட்டாராம். இந்த தகவல் விக்ரமிற்கு வேறு மாதிரி அதாவது சூர்யாவிற்கு துருவ நட்சத்திரம் படம் பிடிக்கவில்லை என்பது போல போக சற்று அதிர்ச்சியில் இருந்தாராம்.
துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ரஜினி தான்- கெளதம் மேனன்.!
பின் ஒரு முறை விக்ரம் கெளதம் மேனனை சந்தித்து பேசும்போது சூர்யாவுக்கு எதற்காக இந்த கதை பிடிக்கவில்லை என கேட்டாராம். அதற்க்கு கெளதம் மேனன் சூர்யாவுக்கு கதை மிகவும் பிடித்திருந்து படத்தின் ஐடியா பற்றி கூறினேன் அவர் நேரில் அழைத்து படத்தின் கதை முழுவதும் கேட்டார். கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்தது.
ஆனால், அந்த சமயம் சூர்யா இரண்டு பெரிய படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். அதன் காரணமாக தான் அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக விக்ரமிடம் கெளதம் மேனன் கூறினாராம். இந்த தகவலை கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” துருவ நட்சத்திரம் 1-வது பாகம் நல்ல வெற்றியை பெற்றது என்றால் இரண்டாவது பாகம் எடுப்பேன். அதுவும் யுனிவர்ஸ் பார்மெட்டில் எடுப்பேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …