thalapathy 68 vijay [File Image]
விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 461 கோடி வசூல் செய்திருந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இருப்பினும் படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரத்தில் பல சாதனைகளை படைத்திருந்தது. குறிப்பாக இதுவரை விஜய் நடிப்பில் வெளியாவதற்கு முன்பே அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் அதிக தொகைக்கு ஆடியோ உரிமை விற்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. அதனை மிஞ்சும் அளவிற்கு தளபதி 68 படத்தின் ஆடியோ உரிமை விற்கப்பட்டது.
இந்த நிலையில், லியோ படத்தை விட 20 % அதிகமாகவே தளபதி 68 திரைப்படம் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனை பார்த்துவிட்டு விஜய் மெய்சிலிர்த்து விட்டாராம்.
தளபதி 68 படத்தின் வில்லன் யார் தெரியுமா? பிஸியான நடிகரை லாக் செய்த வெங்கட் பிரபு!
ஏற்கனவே, விஜய்க்கு காமெடியான கலகலப்பான படங்கள் என்றால் நன்றாக செட் ஆகும் என்ற காரணத்தால் வெங்கட் பிரபுவுடன் அவர் ஒரு படத்தில் இணைகிறார் என்றால் அந்த படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெருமாம் அது மட்டுமின்றி படத்தில் ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் காமெடி காட்சிகளுக்கு குறையே இருக்காதாம்.
எனவே, தளபதி 68 திரைப்படம் பெரிய அளவில் பிரமாண்டமாக எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறாராம். லியோ படத்தின் ஆடியோ உரிமையை விட தளபதி 68 திரைப்படத்தின் ஆடியோ உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளதால். அதைப்போல படத்தின் டிஜிட்டல் உரிமையையும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய தொகைக்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தனஞ்செயன் கூறியுள்ளார்.
லவ் டுடே நாயகியை தட்டி தூக்கிய ‘தளபதி 68’ படக்குழு! எந்த கதாபாத்திரத்திற்கு தெரியுமா?
இந்த தளபதி 68 திரைப்படத்தில் லைலா, மீனாட்சி, ஸ்னேகா, பிரபு தேவா, பிரசாந்த், பிரேம் ஜி, வைபவ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்கள். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…