அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடித்துள்ள ராக்கி திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஒரே ஒரு டீசர் வெளியாகி அந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து, அடுத்த பட இயக்கும் வாய்ப்பை பெற்றால் கூட ஆச்சர்யமில்லை. இயக்கிய இரண்டாவது படத்திலேயே ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக்கி, கீர்த்தி சுரேஷை கதையின் நாயகியாக்கி இரண்டாவது படத்தையும் ரிலீசுக்கு தயார் படுத்திவிட்டார்.
அது கூட பரவாயில்லை, தான் இயக்கிய 2 படங்களில் ஒன்று கூட ரிலீஸ் ஆக வில்லை அதற்குள் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனுஷுக்கு கதை கூறி அடுத்த பட வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.
இத்தனை ஆச்சர்யத்தையும் செய்து காட்டியவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். அவர் இயக்கிய ராக்கி திரைப்படம் எப்போது வெளியாகும் என டீசர் வெளியான நாள் முதல் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
தரமணி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த வசந்த் ரவி இதில் ஹீரோவாக நடித்துள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தினை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்நிறுவனம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி படத்தில் தியேட்டரில் வெளியிட உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…