ராக்கி ஹீரோ ஒரு அமெரிக்க மருத்துவரா?! வெளியான ஆச்சர்ய பின்னணி.!

அமெரிக்காவில் MBBS முடித்து அப்பல்லோவில் வேலை செய்து வந்துள்ளார் ராக்கி நாயகன் வசந்த் ரவி. அடுத்தடுத்து 4 படங்கள் தயாராகி வருகிறதாம்.
தனது முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் திரையுலகை பிரமிக்க வைத்தவர் நடிகர் வசந்த் ரவி. தரமணி திரைப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அதனை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு அண்மையில் வெளியான ராக்கி திரைப்படமும் அவருக்கு நடிப்புக்கான நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது.
ராக்கி படத்தில் மிரட்டலான ரவுடியாக நடித்து பார்வையாளர்களை மிரளவைத்தார். இவர் அடிப்படையில் ஒரு மருத்துவராம், அமெரிக்காவில் MBBS முடித்து, ஹெல்த் கேர் மேனேஜ்மென்டில் முதுகலை பட்டம் பெற்றுள்ளாராம். பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளாராம்.
மருத்துவராக இருக்கும் போதே கிடைக்கும் நேரத்தில் நடிப்பு பயிற்சி எடுத்து நல்ல நடிகராக தன்னை திரையுலகில் நிலைநிறுத்தி கொண்டுள்ளார். இவர் அடுத்ததாக 4 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளாராம். அதில், காதல், திரில்லர் திரைப்படங்கள் என கலவையாக நடிக்க உள்ளாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025